கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரல் கட்சி சார்பில் போட்டியிடும் கே.ஐ.மணிரத்தனத்தை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சித் தொகுதிக்குட்பட்ட நாகலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
தமிழகம்

வகுப்புவாத சக்திகளுக்கு இடமளித்து விடக்கூடாது: கள்ளக்குறிச்சி அருகே கே.எஸ். அழகிரி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற அணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் சமூக நல்லிணக்கம் மேம்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசினார்.

கள்ளக்குறிச்சித் தனித் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்வேட்பாளர் கே.ஐ.மணிரத்தனத்தை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்றுமுன்தினம் இரவு கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிமங்க ளம் மற்றும் நாகலூரில் வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், " தமிழகம் மதச்சார்பற்ற மாநிலத்துக்கு முன்னுதாரமாக விளங்கக் கூடிய மாநிலம். இங்கு வகுப்புவாத சக்தி களுக்கு இடமளித்து விடக்கூடாது.

மத்திய அரசின் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விண்ணை முட்டுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விஷம்போல் உயர்ந்துள்ளது.மக்கள்பல இன்னல்களுக்கு ஆளாகியுள் ளனர். அவர்களுக்கு விடியலை தேடித் தரும் வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஐ.மணி ரத்தனத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற் றிபெறச் செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT