கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா அரவக்குறிச்சியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியது: வேட்பாளர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். நன்கு படித்தவர். விவரம் தெரிந்தவர். நல்ல திறமையானவர். அரவக்குறிச்சியில் தாமரைக்கு வாக்களியுங்கள். தாமரை மலரும், தமிழகம் வளரும் என்றார்.
பாஜக கரூர் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், ஈசநத்தம், சின்னதாராபுரம் ஆகிய இடங்களிலும் அண்ணாமலையை ஆதரித்து நமீதா பிரச்சாரம் செய்தார்.