தமிழகம்

திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலில் தமிழகத்தை காக்க வேண்டும்: ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கருத்து

செய்திப்பிரிவு

திமுகவின் சந்தர்ப்பவாத அரசி யலில் இருந்து தமிழகத்தை காத்திட வேண்டும் என ஏஐஎம் ஐஎம் கட்சியின் தலைவர் அசாது தீன் ஓவைஸி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி பேசும்போது, ‘‘அமமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை யில், இஸ்லாமியர்களுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதாக தினகரன் உறுதி அளித்துள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் உள்ள 41 இஸ்லாமியர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த அணி மூன்றாவது அணியாக உருவெடுக் கும். எங்கள் கட்சி அவருக்கு உறுதுணையாக இருக்கும். அதிமுக-பாஜக கூட்டணியால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநாவில் நடைபெற்ற வாக் கெடுப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காத மோடி அரசுக்கு அதிமுக எப்படி ஆதரவு அளிக்கிறது. வரக்கூடிய தேர்தலில் அதிமுகவை மட்டு மல்லாது திமுகவையும் தோற் கடிக்க வேண்டும்.

தமிழகத்தை டி.டி.வி.தினகர னால் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும். தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த திமுகவினரால் மட்டும் தான் பேச முடியுமா? ஏன் நாங்களும் தான் பாஜகவை வீழ்த்த விரும்புகிறோம்‌. எங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது முக்கியமான குறிக் கோள்.

எனவே தான் தமிழகத்துக்கு மூன்றாவதாக ஒரு அரசியல் அணி தேவை. தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் யாவும் அப்படி இல்லை. பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ கத்தை காப்பாற்ற வேண்டும். திமுகவின் சந்தர்ப்பவாத அரசிய லில் இருந்து தமிழகத்தை காத்திட வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தர வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT