திருமாவளவன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை: திருமாவளவன் விமர்சனம்

எஸ்.நீலவண்ணன்

ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 25) அக்கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

அதன்பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மீனவர்களை சிறைபிடித்த சிங்கள அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிப்பதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. கச்சத்தீவை மீட்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கூட்டணி ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணியாகும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தேர்தலை நடத்துவதில் மட்டுமே உள்ளது. கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்துவருகிறது. ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை.

வன்னியர் உள் ஒதுக்கீடு உரிய மக்களுக்கு சென்று சேர வாய்ப்பில்லை.

கருத்துக்கணிப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT