தமிழகம்

தமிழக தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு;  யாருக்கு எவ்வளவு இடங்கள்?-  டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதுபோலவே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

யாருக்கு எவ்வளவு இடங்கள்?

மொத்த இடங்கள்: 234

திமுக கூட்டணி 177 இடங்கள்

அதிமுக கூட்டணி 49 இடங்கள்

மக்கள் நீதி மய்யம் 3 இடங்கள்

அமமுக 3 இடங்கள்

மற்றவர்கள் 2 இடங்கள்


இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 46 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 34.6 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 4.4சதவீதமும் ; அமமுகவுக்கு 3.6 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு 11.4 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT