கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் வெற்றிபெற்றால் தொகுதியில் நிறைவேற்றப்படும் 25 வாக்குறு திகள் கொண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் எம்.எல்.ஏஅலுவலகம் அமைக்கப் பட்டு, அவை 24 மணி நேரமும்மக்கள் குறைதீர்ப்பு மையங்களாக செயல்படும்.
நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச நிலப்பட்டா வழங்கப்படும். மத்திய சிறைச்சாலை ஊருக்கு வெளியே மாற்றப்பட்டு, அந்த இடத்தில் ஒருங்கிணைந்த மார்க் கெட் பிளாசா அமைக்கப்படும். காந்திபுரம், கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். தொகுதி முழுவதும் 6 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். தொகுதியில் அரசு ரத்த வங்கி அமைக்கப்படும்.
ஆதரவற்ற முதியோர்களுக் கான இல்லம் அமைத்துத்தந்து, அவர்களுக்கு உணவு வழங்கப்படும். மருத்துவக் காப்பீடும் செய்து தரப்படும்.
அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகங்கள் அமைக்கப்படும். கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்படும். சிறுகுறு தொழில்முனைவோர் களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப் படும். அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் திறன் மேம்பாட்டு முகாம்கள் அமைக்கப்படும்.
தொகுதி முழுவதும் சுத்தமானகுடிநீர் சீராக விநியோகிக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகள் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படும். சுகாதாரமான கோவையாக திகழ, திடக்கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும். அரசின் சேவைகள் வீடு தேடிவரும். அம்பேத்கர் விடுதி மற்றும் அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவறைவசதி செய்யப்படும். ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் இலவச மையங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், பள்ளிக்கல்வி முடித்த மாணவ, மாணவியரை உட்படுத்தி மாணவர் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னைப் பற்றி நடிகர் ராதாரவி விமர்சனம் செய்துள்ளார். அவர்வாங்கிய சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார். ஆனால் அமைச்சர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கவில்லை என்பது தான் என் கோபம்” என்றார்.