கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு மலர் கொடுத்து வாழ்த்திய சிறுமிகள். 
தமிழகம்

அமைதியான ஆட்சி தொடர தாமரைக்கு வாக்களியுங்கள்: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்வானதி சீனிவாசன், தொகுதிக்குட் பட்ட பாப்பநாயக்கன் பாளையம், புது சித்தாபுதூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வீடு வீடாகசென்று மத்திய, மாநில அரசுகள் செய்த சாதனை திட்டங்களை மக்களுக்கு விளக்கி, ‘தாமரை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து எல்லா தரப்பு மக்களுக்கும் உதவிகள் கிடைக்கும் வண்ணம் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்துவருகிறது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பாக இருக்க கூடிய சூழல் உள்ளது.

தொழில் செய்பவர்கள் அமைதியான முறையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொழில் செய்துவருகின்றனர். ரவுடியிசம் இல்லாமல் அமைதியான ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால், தமிழகம் வளமாக இருக்கவேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும். மத்தியில் மோடி தலைமையில் வளமானஅரசு உள்ளது. அந்த அரசு மூலம்கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்,அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன.

இதே பகுதியில் ஆயிரத்து 800 வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி நடந்துவருகிறது. இன்னும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக நான் இருந்தால், அது இன்னும் விரைவாக நடக்கும். உங்களுக்கு எந்த திட்டத்தை வேண்டுமானாலும் வாங்கி வர என்னால் முடியும். வலிமை வாய்ந்த வேட்பாளராக நான் இருக்கிறேன்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து அதேபகுதி யில் கீரை விற்கும் நல்லம்மாள் என்பவர் கொடுத்த கீரை கட்டை வாங்கிக் கொண்டு, விரைவில் அவருக்கு, முத்ரா திட்டத்தில் வங்கிக் கடன் பெற்றுத் தருவ தாக வானதி சீனிவாசன் உறுதியளித் தார்.

பிரச்சாரத்தின் போது முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி, காந்திபுரம் பகுதி அதிமுக செயலா ளர் ராஜ்குமார், பாரதிய ஜனதா மண்டல தலைவர் முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT