ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருகிறோம் என்று கூறிவிட்டு, கையில் ‘வேல்’ கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என மத்திய அரசு மீது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப் பேரவைத் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து, கபிஸ்தலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:
மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறோம் எனக் கூறியது. ஆனால், வேலைவாய்ப் புகளை உருவாக்கித் தருவதற்குப் பதிலாக, கையில் ‘வேல்' கொடுத்து ஏமாற் றிவிட்டனர். கரோனா தொற்று பரவலால், பலர் வேலையையும் இழந்துவிட்டனர்.
நாட்டில் வெங்காயம், சமையல் காஸ் உள்ளிட்டவற்றின் விலைவாசி அதிகரித் துக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்திலிருந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு பாழ்படுத்திவிட்டது. திருச்சியில் உள்ள ரயில்வே பணிமனை யில் உள்ள பணியிடங்களில் பெரும்பாலா னோர் வடமாநிலத்தவர்களே நியமிக்கப் பட்டுள்ளனர். இப்படி எல்லா இடங்களி லும் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஏப்.6-ம் தேதி மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சி என அதிமுகவினர் அடிக்கடி கூறுகின்றனர். மாநில உரிமையை ஒருபோதும் ஜெயலலிதா விட்டுக்கொடுத்ததில்லை. 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது இந்த பெரியார் மண். இங்கு சமூகநீதியில் யாரும் கை வைக்க முடியாது. அந்த அளவுக்கு அஸ்திவாரம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.