அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் ‘இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது.
சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி கஸ்தூரி னிவாசன் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆய்வரங்கத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து ஃபிரன்ட்லைன் முதுநிலை துணை ஆசிரியர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோச கரும், மேற்கு வங்க மாநில முன் னாள் ஆளுநருமான எம்.கே.நாராய ணன், ஈழ அகதிகள் மறுவாழ்வு நிறுவன பொருளாளர் எஸ்.சி.சந்திர ஹாசன், ‘இந்து’ என்.ராம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 044-28524445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு (காலை 10 முதல் மாலை 6 மணி வரை) தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள லாம்.
மேலும், thc@thehinducentre.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டும் பதிவு செய்ய லாம்.
இந்நிகழ்ச்சியின்போது, தள்ளுபடி விலையில் ‘தி இந்து’ குழும பதிப்புகள் கிடைக்கும்.