திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வயலில் இறங்கி கூலித் தொழிலாளர் களுடன் இணைந்து நாற்று நட்டு வாக்குச் சேகரித்தார்.
திருமங்கலம் தொகுதிக் குட்பட்ட சொக்கம்பட்டி, பொன்னை யாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வாக்குச் சேகரித்தார். அப்போது சொக்கம்பட்டியில் ஒரு வயலில் விவசாய கூலித் தொழிலாளர்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஆர்.பி.உதயகுமார், பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, நாற்று நட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
அதன்பிறகு, அவர்களுடன் சேர்ந்து தானும் நாற்று நாட்டார். இதைப் பார்த்து விவசாய கூலித்தொழிலாளர்கள் அமைச்சரிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துப் பேசுகையில், ‘‘விவசாய பம்பு செட்டுகளுக்கு ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார்,’’ என்றார்.