தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனை ஆதரித்து அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் அதிமுக அரசு: விஜயசீலனை ஆதரித்து தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

‘‘பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் அதிமுக அரசு தொடர வேண்டும்’’ என, தூத்துக்குடி பிரச்சாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜய சீலனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். முத்தையாபுரம், 3-ம் மைல், சிதம்பரநகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாசன் வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் நேர்மையான, திறமையான வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கஅவர் பாடுபடுவார். தூத்துக்குடியில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்த்து வைப்பார். தூத்துக்குடி துறைமுகத்தின் மேம்பாட்டுக்காக பாடுபடுவார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்றடையச் செய்வார்.

மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்து வருகின்றன. இந்த இணக்கம் தொடர தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் தான் பெண்களுக்கு அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் அதிமுக அரசு தொடர வேண்டும். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜூவை ஆதரித்து நேற்று கிருஷ்ணன்கோவில் திடலில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT