தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்து வருவதால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேர பிரச்சாரத்தை வேட்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்
பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரச்சாரக் களத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.
அதே நேரம், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்
களது தொகுதிக்கும், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தொகுதிக்கும் சென்று அவர்களுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் திமுக நிர் வாகிகளுக்கும் தொகுதி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களும் தங்கள் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது.
தேர்தலுக்கு 13 நாட்களே உள்ள நிலையில், கள நிலவரத்தை கருத்தில் கொண்டு தலைவர்களும், வேட்பாளர்களும் தொகுதி முழு
வதும் சுற்றி வருவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். இதற்கிடையில், அதிமுக கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக தலைவர்கள் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவை ஒருபுறம் இருக்க, தற்போது அதிகரித்து வரும் வெப்பமும் வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதற்கு தடையாக உள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட வெப்பம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில், காலை 7 முதல் 11 மணி வரையும், மாலை 4 அல்லது
5 மணி முதல் இரவு 10 மணிவரையும் வாக்கு சேகரிக்கும் வகையில் தங்களது திட்டங்களை வேட்பாளர்கள் அமைத்துள்ளனர். அதே நேரம், முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை பொறுத்தவரை, அவர்கள் பொதுமக்கள் மத்தியில் பேசும் சந்திப்பு பகுதிகளில், ஷாமியானா பந்தல் போட்டு கட்சி சார்பில் நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த பகுதிக்கு சற்று முன்னதாக வாகனத்தின் மேல் வெளியில் வரும் தலைவர்கள், நிழல் பகுதிவந்ததும் அங்கு வாக்கு சேகரிக்கின்
றனர். இதுதவிர, திமுகவை பொறுத்தவரை, குறிப்பிட்ட சந்திப்பில் 4,5 வேட்பாளர்களுக்கு சேர்த்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.