தீபாவளி பண்டிகையையொட்டி, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக் கிய ரயில் நிலையங்களை 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண் காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இதையொட்டி, ரயில் நிலை யங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து சென்னை கோட்ட ரயில்வே போலீஸ் எஸ்பி பி.விஜயக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தீபாவளியையொட்டி சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், சேலம், காட்பாடி, கோயம் புத்தூர் மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள மொத்தம் 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டு கண்காணிக்கும் பணி தொடங் கியுள்ளது. வழக்கமான பாதுகாப்பு பணியை தவிர, இரவு 7 மணி முதல் அதிகாலை வரையில் முக்கிய ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்படும்.
ரயில் பயணிகளின் புகாருக்கு 1512 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 09962500500 என்ற வாட்ஸ்அப் எண் ணில் புகார் அளிக்கலாம். பயணி களின் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.