திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் 8 திமுக வேட் பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (25-ம் தேதி) பிரச்சாரம் செய்கிறார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணா மலை காந்தி சாலை அருகே நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகிக்கிறார். கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பிச்சாண்டி, செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிரி, போளூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சேகரன், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அம்பேத்குமார், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சரவணன், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி வேட் பாளர் அன்பழகன், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜோதி மற்றும் திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் எ.வ.வேலு ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள் கின்றனர்.