தமிழகம்

பாளை.யில் ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா தெருவை மூடியது மாநகராட்சி

அ.அருள்தாசன்

பாளையங்கோட்டையில் ஒரே வீட்டில் 4 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வசிக்கும் தெருவை மாநகராட்சி மூடியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பாளையங்கோட்டையில் முனையாடுவார் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. அந்த வீட்டிலுள்ள ஒருவர் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

இந்நிலையில் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் மனக்காவலம்பிள்ளை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான சுகாதார பிரிவு ஊழியர்கள் அந்தத் தெருவை மூடினர். தெரு முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனிடையே திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிலைய பகுதிகள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT