தமிழகம்

நடிகர் மன்சூர் அலிகான் திடீர் பல்டி

செய்திப்பிரிவு

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக நேற்றுமுன் தினம் மாலை அறிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சின்னத்தை கேட்டுப்பெறுவதற்காக கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மன்சூர் அலிகான் வந்தார்.

அப்போது அவர் கூறும்போது, “எங்கே சென்றாலும் பணம் பெற்றுக்கொண்டீர்களா என வேண்டுமென்றே கேட்கவைத்து, என்னை சோர்வடையச் செய்தனர். என்னை இங்கிருந்து அனுப்புவதற்காக திட்டம் போட்டனர். தேர்தல் பணிமனைக்கு இடம் கிடைக்கவிடாமல் தடுத்தனர். மேலும், தேர்தல் பிரச்சார வாகனத்துக்கான அனுமதி அளிக்க தாமதிக்கின்றனர்.

மக்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டேன். அதைவிட்டுக்கொடுக்க மாட்டேன். தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். தொண்டாமுத்தூர் தொகுதியில் விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது தென்னை மரங்கள். எனவே, தென்னந்தோப்பு சின்னம் கேட்டுள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT