சென்னை எழும்பூர், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 4 நாட்களாக ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். கொளத்தூர், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, தரமணி, வேளச் சேரி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அரிசி, பால் பாக்கெட், ரொட்டி, போர்வை போன்ற பொருட்களை வழங் கினார். அதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், ஆர்.கே.நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது சுமார் 1,000 பேருக்கு திமுக சார்பில் தலா 5 கிலோ அரிசி, பால் பாக்கெட், ரொட்டி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் திருவிக நகர் தொகுதியில் எஸ்.எஸ்.புரம், அருந்ததி நகர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அங்கும் ஆயிரத்துக்கும் அதிக மானோருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங் கினார்.