கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி போடும் காலத்தை 6 முதல் 8 வாரங் களாக நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி யுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத் தின் கோவேக்ஸின் மற்றும் மகாராஷ் டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் தயாராகியுள்ள இங்கிலாந்து ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவி ஷீல்டு ஆகிய ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகள் அவசரக்கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரம், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறை களின் முன்களப் பணியாளர்களுக்கும் இரண்டாவது கட்டமாக கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ள வர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி போடப் பட்டு 28 நாட்கள் (4 வார இடைவெளி) நிறைவடைந்தவர்களுக்கு இரண்டாம் தவணையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவ மனைகளில் ரூ.250 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 22 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணையை 4 முதல் 6 வார இடைவெளிக்கு பதிலாக 6 முதல் 8 வார இடைவெளியில் போடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
6 முதல் 8 வாரமாக அதிகரிப்பு
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு அனுப்பி யுள்ள செய்திக்குறிப்பில், “கோவி ஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணை 4 முதல் 6 வார கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. இந்த கால இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்கலாம். இதன் மூலம் கூடுதல் பலன் கிடைக்கும். தேசிய தடுப்பூசி குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப குழு ஆலோசனைகளின்பேரில் இந்த பரிந்துரை செய்யப்படுகிறது. கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே கால அவகாசம் பொருந்தும். கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பொருந்தாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி யின் இரண்டாவது தவணை 4 வார இடைவெளியில் போடப்படுகிறது. இந்த கால அவகாசத்தை 6 முதல் 8 வாரமாக அதிகரிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கூடுதல் பலன் கிடைக்கும். அனுமதி அளிக்கப்பட்டவர்கள் தடுப் பூசியை கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியும் முகக்கவசம் மட்டுமே கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும். கரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டு வருகின்றன” என்றார்.