தமிழ் தேசிய உணர்வு கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழர் தேசியமுன்னணி தலைவர் பழ.நெடுமா றன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் சட்டம் வழங்கிய மக்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி பாஜக ஆட்சி வரை தொடரும் அவலம் நீடிக்கிறது,
ஆனால் மாநில சுயாட்சிக்காக அமைக்கப்பட்ட கட்சிகள், மாறி மாறி மேற்கண்ட இரு கட்சிகளுடன் கூட்டு சேரும் சந்தர்ப்பவாதப் போக்கு தொடர்கிறது.
பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், மதங்களைச் சார்ந்தவர்களும் வாழும் நாட்டில், மதவெறி அரசியலை தலைதூக்க அனுமதிப்பது ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தி மக்களாட்சியின் மாண்பைக் காப்பது மக்களின் கடமை.
ஜனநாயக நெறிமுறைகளைக் காக்கவும், தமிழ், தமிழர், தமிழகநலன் சார்ந்த பிரச்சினைகளில் சட்டப்பேரவையில் குரல் கொடுக்கவும் அவற்றுக்காக போராடவும் உறுதிபூண்ட தமிழ்த் தேசியஉணர்வு கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.