மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லூரில் நேற்று பேசியதாவது:
நீட் தேர்வு தமிழகத்துக்கு வராது, சட்டப்பேரவையில் தீர் மானம் நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக அரசு பொய்யைப் பரப்பியதை நம்பி அனிதா உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
மாணவர்களின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் 19 முதல் 28 வயதுள்ள சுமார் 1 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 79 பேர் வாக்களிக்க இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 90 லட்சம் பேருக்கு வேலையில்லை.
அத்தகையோரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர் களுக்கு வேலை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திருத்தம் செய்துள்ளனர். இது தமிழக இளைஞர்களுக்கு அரசு செய்த நயவஞ்சகம் என்றார்.