கோப்புப்படம் 
தமிழகம்

உயர் நீதிமன்றக் கிளையில் ஏப். 7-ம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் அறிவிப்பு

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 3 மாதங்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்: நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்கள், நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்கின்றனர்.

நீதிபதி வி.எம்.வேலுமணி, 2018 முதல் நிலுவையில் உள்ள தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், தியாகிகள் ஓய்வூதிய மனுக்கள், நீதிபதி ஜெ.நிஷாபானு, மோட்டார் வாகனம், மோட்டார் வாகன வரி, ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கம், கலால், மது விலக்கு ஆயத்தீர்வை, கனிமம், வனம், தொழிற்சாலைகள் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்கின்றனர்.

அரசு பணி ரிட் மனு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2014 வரையிலான முதல் மேல்முறையீடு மற்றும் இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, 2017 வரையிலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.தாரணி, 2018 வரையிலான உரிமையியல் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.

நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி என். ஆனந்தவெங்கடேஷ், கல்வி, நில சீர்த்திருத்தம், நில உச்ச வரம்பு, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.சந்திரசேகரன், ஜாமீன், முன் ஜாமீன் தொடர்பான மனுக்கள், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், 2015 முதலான இரண்டாவது மேல்முறையீடு, 2014 வரையிலான உரிமையியல் இரண்டாவது மேல்முறையீடு, கம்பெனி மேல்முறையீடு, உரி மையியல் சீராய்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.

நீதிபதி ஜி.இளங்கோவன், 2018 முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407 மற்றும் 482 பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்ற வியல் மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள், நீதிபதி சதிகுமார் சுகுமாரகுருப், 2017-ம் ஆண்டு வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் மேல் முறையீடு தொடர்பான மனுக்கள், சிபிஐ மற்றும் லஞ்ச வழக்குகளையும், நீதிபதி கே.முரளிசங்கர், 2019 முதலான உரிமையியல் மேல்முறையீடு மனுக்கள், 2019 முதலான உரி மையியல் சீராய்வு மனுக்களை விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT