சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவில் தனக்கு வாய்ப்புக் கொடுக்காததால் விரக்தி அடைந்த நடிகை கவுதமி ராஜ பாளையத்தில் இருந்து சென்றார்.
அதிமுக, பாஜகவுக்கு தேர்தல் உடன்பாடு ஏற்படும் முன்பே ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3 மாதங்களாக, ராஜபாளையத்தில் தங்கியிருந்து கட்சி, தேர்தல் பணிகளை செய்து வந்தார். இதனால் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளராக நடிகை கவுதமியே அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், அத்தொகுதி யில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. இருப் பினும் விருதுநகரில் போட் டியிட வாய்ப்பு கிடைக்கும் என கவுதமி காத்திருந்தார். ஆனால், பாண்டுரெங்கன் என்பவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத் தது. இதனால் கவுதமி கடும் அதிருப்தி அடைந்து சென்னை சென்றார். மேலும் அவர் தற்போது புதுச்சேரி, கோவை என மாறிமாறி பிரச்சாரம் செய்கிறார்.
தொகுதிப் பொறுப்பாளராக இருந்தும் தொகுதிப் பக்கமும், பாஜக போட்டியிடும் ஒரே தொகு தியான விருதுநகரிலும் கவுதமி பிரச்சாரத்துக்கு செல்லாதது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.