ரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற் றால், தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரி வித்தார்.
ரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.பழனியாண்டியை ஆதரித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ரெட்டை வாய்க்கால் பகுதியில் அவர் பேசியது: ரங்கம் தொகுதியில் எப்போதெல்லாம் திமுக வெற்றி பெற்றதோ அப்போதெல்லாம் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. எனவே, திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ரங்கத்தில் திமுக வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்த வளர்மதி தொகுதிக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்தவில்லை. இந்த தேர்தல் நமக்கான கடைசி முயற்சி. இதில் கண்டிப்பாக திமுக வெற்றி பெற வேண்டும். எனவே, கட்சியினர் தீவிரமாக பணியாற்றி திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ரங்கம் பகுதியில் பேசும் போது, ‘‘நீங்கள் கும்பிடக்கூடிய பெருமாளைத் தான் நானும் கும்பி டுகிறேன். எனக்கும் பெருமாள் தான் குலதெய்வம். உங்களுடைய முன்னேற்றம், உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற் காகத் தான் நான் இருக்கிறேன். நீங்கள் பெரிய மனது வைத்து, திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இங்குள்ள பிராமணர்களின் உயர்வுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்” என்றார்.
இந்த பிரச்சாரத்தில் திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் பகுதிச் செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, ஒன்றியச் செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.