‘மதுக்கடைகளை திறந்து தமிழகத்தில் இளம் விதவைகளை உருவாக்கிய அதிமுக, திமுவுக்கு மக்கள் தான் தண்டனை அளிக்க வேண்டும். இந்த தண்டனை அளிக்கும் காலம் தான் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல், என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பாமக ஒருங் கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத் தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:
தமிழகத்தில் அன்புமணி ஆட்சியில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அனைவருக்கும் இலவச கல்வி, விவசாயத்தில் உயர் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும். கடந்த 50 ஆண்டுகளில் மதுக்கடைகளை திறந்துவிட்டு தமிழகத்தில் இளம் விதவைகளை உருவாக்கிய இந்த இரண்டு கட்சி களுக்கும் மக்கள்தான் தண்டனை அளிக்க வேண்டும்.
இந்த தண்டனை அளிக்கும் காலம்தான் 2016-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல். தமிழகத்தில் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டுமென்றால் அதிமுகவும், திமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. பெண்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். அன்புமணியின் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சியாகவும், மது இல்லாத ஆட்சியாகவும் இருக்கும்.
வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தொகை போதுமானதல்ல. கடலூர் மாவட்டத்தில் மட்டுமே ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் நிதியை பெற்று, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தை கொடுக்கும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்யுமே தவிர, மக்களுக்கு முறையாக நிவாரணம் கிடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.கடந்த 2005-ம் ஆண்டு சுனாமி பாதிப்புக்கு பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தது.மாநில அரசுகளும் இதுபோன்ற ஆணையத்தை அமைக்க வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை இந்த ஆணையத் தையும் அமைக்கவில்லை.
2016 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும். அதிமுக, திமுகவோடு கூட்டணிக்கு செல்லாது. அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர், என்றார்.
கட்சி தலைவர் ஜி.கே. மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ், துணைத்தலைவர் ச.வடிவேலன் ஆகியோர் உடனிருந்தனர்.