சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் 3-ம் நாளான நேற்று, கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படம்: க.பரத் 
தமிழகம்

மயிலாப்பூர் பங்குனிப் பெருவிழாவில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவில் நேற்று கற்பகாம்பாளுடன் கபாலீஸ்வரர் அதிகார நந்தி வாக
னத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் பங்குனிப் பெரு
விழா கடந்த மார்ச் 19-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாடவீதிகளில்..

இதைத் தொடர்ந்து, நேற்று காலை 6 மணிக்கு அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுடன் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், நேற்று நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து, வரும் 25-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மார்ச் 26-ம் தேதி வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சி தருதல், மார்ச் 28-ம் தேதி இரவுதிருக்கல்யாணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT