விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டுவந்த ராமசாமிக்கு மாலை அணிவித்த அவரது இரு ஆதரவாளர்கள். 
தமிழகம்

விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளரானதே வெற்றி தான்! :

ந.முருகவேல்

தேர்தல் என்றாலே பல்வேறு சுவராஸ்யமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுவது வழக்கம். அதுவும் சுயேச்சை என்றால் சுவராஸ்யத்துக்கு குறை விருக்காது. ஆமாங்க கடந்த வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டம் வாழ்வார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிடுவதற்காக வேட்புமனு தாக் கல் செய்ய வந்திருந்தார். வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பின்னர் வெளியே வந்தவருக்கு அவருடன் வந்திருந்த இருவர் கையில் வைத்திருந்த மாலையை போட்டு சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ஒருவழி யாக வேட்புமனு தாக்கல் செய்து விட்டோம். அடுத்து பிரச்சாரம் தான் என்றனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்த வரோ, அவரு வேட்புமனு ஏற்பதே சந்தேகம் தான். இந்த ஆரவாரமா என்ற முணுமுணுத்தார். அப்படி என்ன பிரச்சினை என்றோம். வேறு மாவட்டத்திலிருந்து வந்து இங்கு மனுத்தாக்கல் செய்கிறார். அவருடைய பெயர்

எந்த மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக் கிறது என சான்று இணைக் கப்படாமலேயே மனு தாக்கல் செய்துள்ளார். சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) அந்த சான்றை ஒப்படைத்தால் தான் அவரது வேட்புமனு ஏற்கப்படும் என்றார். ராமசாமியோ இரவோடு இரவாக சான்றிதழை பெற்றுவந்து ஒப்படைத்து, வேட்பாளராகிவிட்டார் இப்போது.

SCROLL FOR NEXT