திருச்சுழி தொகுதியில் கிராமங்கள் தோறும் சென்று திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இவர் நேற்று காரியாபட்டி ஒன்றியம் அழகியநல்லூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்பட உள்ள வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கினார். அதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மீண்டும் குழுக் கடன்கள் வழங்கப்படும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
காரியாபட்டி திமுக ஒன்றியச் செயலாளர் கா.கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.