ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி நல்லாட்சி செய்கிறார் என நடிகை விந்தியா பேசினார்.
திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆத ரித்து பேரையூர், கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் நடிகை விந் தியா பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி நல்லாட்சி செய்கிறார். ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல்காந்தியும், உதயநிதியும் வேடிக்கை பார்க்க வந்தனர். ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதை நீக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது திமுக. ஆனால் முதல்வராக இருந்த ஓபிஎஸ் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றார்.
ராகுல் காந்தி தமிழ் கலாச்சாரம், மொழி, இனம் எனப் பேசியுள்ளார்.இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களைக் காவு கொடுத் தது திமுக-காங்கிரஸ் கூட்டணி. நமது பாரம்பரியப் பொங்கல் விழாவில் அடுப்பே பற்ற வைக் காமல் ஸ்டாலின் பொங்கல் கிண்டுகிறார். இவர்களுக்கு தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேச தகுதி இல்லை.
தேர்தல் களத்தில் ஸ்டாலின் டிசைன், டிசைனாக விளம்பரம் செய்கிறார். நமக்கு நாமே என 2016 தேர்தலில் கோஷமிட்டார். ஆனால் மக்கள், திமுக ஆட்சி தேவை யில்லை என முடிவெடுத்தனர். விடியலை நோக்கி ஸ்டாலின் என ஊர் ஊராகக் கடைகளில் போர்டு வைத்துள்ளனர். வியாபாரிகளே நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் விரலில் உங்கள் வாழ்க்கை. தற்போது தமிழகம் வெற்றி நடை போடுகிறது. இத்தேர்தல் மூலம் வீர நடை போட மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.