தமிழக ஆட்சி தமிழகத்திலிருந்து நடத்தப்படும் என திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை யில் நேற்று கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து, திமுக மகளிரணிச் செயலாளரான எம்.பி கனிமொழி பேசியது:
காவல் துறை உயரதிகாரி மீது புகார் அளிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியையே வழிம றித்து மிரட்டுகின்றனர். நீதிமன்றம் கண்டித்த பிறகே, உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி. மத்திய அரசு விவ சாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து விவ சாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர் முதல்வர் பழனிசாமி.
தமிழ்நாடு அமைதியாக இல்லை. தமிழக மக்கள் நிம்மதி யாக இல்லை. எதிர்கால பயத்துடன் உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தமிழ கத்தில் 3.50 லட்சம் அரசுப் பணி யிடங்கள் காலியாக உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக இளைஞர்களை கொண்டு நிச்ச யமாக இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை சட்டங் களை முதல்வர் பழனிசாமி ஆதரித்துவிட்டு, தற்போது அச்சட்டங்களை திரும்பப்பெற அழுத்தம் தருவோம் என்கிறார். இதையெல்லாம் நம்ப மக்கள் முட்டாள்களா? மக்களை முட்டா ளாக நினைத்தவர்கள் தாங்கள் தான் முட்டாளாகி இருக்கின்றனர். 3 மாதங்களுக்கு முன் ஒரு நிலைப் பாடு. தேர்தல் வந்தால் ஒரு நிலைப்பாடு.
தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை, தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக தடுக்காமல் இருந்துவிட்டார் பழனி சாமி. நீட் தேர்வையும், சிறுபான்மை யினர், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களையும் ஆதரித்தார். தமிழ கத்தை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்தளவுக்கு சீரழித்து விட்டனர். தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர். தமிழ கத்தை மீட்டெடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக உரிமைகள் மீட்டெடுக்கப்படும். தமிழக ஆட்சி தமிழகத்தில் இருந்து நடத்தப்படும்.
செல்போன் வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிய எதையுமே அதிமுக ஆட்சி செய்யவில்லை. எதற்கும் பயன்படாத பொருட்களை தூக்கி எறிவதைப்போல, இந்த ஆட்சியை தூக்கி எறியவேண்டும். திமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற ஸ்டாலின் முதல் வராக வேண்டும். அவர் முதல் வராக கிருஷ்ணராயபுரம் தொகுதி யில் திமுக வேட்பாளர் சிவகாம சுந்தரிக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்களியுங்கள் என்றார்.