தமிழகத்தில் தொழில்வளத்தைப் பெருக்கி, அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் அமமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமியை ஆதரித்து டிடிவி.தினகரன் நேற்று பேசியதாவது:
எங்கள் ஆட்சியில் ஒவ்வொரு பகுதியிலும் தொழில்வளத்தைப் பெருக்கி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பொறியியல் படித்தவர்கள் 5 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தினால், தொழில் தொடங்க தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள சொத்து களை பறித்துக் கொள்வார்கள். அதுபோல, முதல்வர் பழனிசாமி மக்களுக்கு பணத்தைக் கொடுத்து, விலைக்கு வாங்க பார்க்கிறார் என்றார். தொடர்ந்து, திருவையாறில் வேலு.கார்த்திகேயன், ஒரத்தநாட்டில் ம.சேகர் ஆகியோரை ஆதரித்து பிரச் சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அமமுக வேட்பாளர் களான அரியலூர் தொகுதி துரை மணிவேல், ஜெயங்கொண்டம் தொகுதி சிவா, குன்னம் தொகுதி கார்த்திகேயன் மற்றும் பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன் ஆகி யோரை ஆதரித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே டிடிவி தினகரன் பேசியது: ஏற் கெனவே, பல லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் உள்ளது. இந்நிலையில், மேலும் இலவச திட்டங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?. ஆட்சி மாற் றம் ஏற்பட்டவுடன் முதல்வர் பழனிசாமி, அரியலூர் எம்எல்ஏ ராஜேந்தி ரன் ஆகியோர் கொள்ளையடித்து வைத்துள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்றார்.
முன்னதாக, அமமுக வேட்பாளர்களான நாகை தொகுதி மஞ்சுளா சந்திரமோகன், கீழ்வேளூர் தொகுதி நீதிமோகன், வேதாரண்யம் தொகுதி பி.எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து, நாகை அவுரித்திடலில் நேற்று முன் தினம் இரவு பிரச்சார பொதுக்கூட் டத்தில் டிடிவி.தினகரன் பேசினார்.