தமிழகம்

தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டுக்கூடு விலை கடும் வீழ்ச்சி: சீனப் பட்டுக்கூடுக்கு தடை விதிக்க கோரிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது, கிலோ ரூ.200 முதல் ரூ.280 வரை விற்கப்படுகிறது. இதைத் தடுக்க சீனப் பட்டுக் கூடுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ண கிரி, உடுமலை, தருமபுரி, தென் காசி, திண்டுக்கல், மதுரை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள் ளனர். பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையவில்லை. அதனால், சீனாவில் இருந்து மத்திய அரசு பட்டுக்கூடுகளை இறக்குமதி செய்கிறது.

இறக்குமதி வரி குறைவால், சீனாவில் இருந்து கடந்த ஓராண்டாக அதிகளவு பட்டுக்கூடுகள் இறக்கு மதியாகின்றன. அதனால், தற்போது தமிழக, கர்நாடக சந்தைகளில் தமி ழக விவசாயிகளின் பட்டுக்கூடு களுக்கு வரவேற்பு இல்லை. எனவே விலை கடும் வீழ்ச்சி அடைந்துள் ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டு வளர்ச்சி விவசாயிகள் தலைவர் சண்முக சுந்தரமூர்த்தி, செயலாளர் குணசேகர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடைசியாக 2013-14-ம் ஆண்டில் பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக ரூ.500-க்கு விற் பனையாகின. தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிய நிலையில்கூட, பட்டுக்கூடுகள் ரூ.200 முதல் ரூ.280 வரை மட்டுமே விற்கிறது. ஆனால், ஒரு கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய ரூ.300 செலவாகிறது. உற்பத்திச் செலவைக்கூட தற்போது எடுக்க முடியவில்லை.

பட்டுக்கூடுகள் கடந்த, ஓராண் டாக விலை குறைவாக விற்ப தற்கு முக்கியக் காரணம் சீன பட்டுக்கூடுகளின் இறக்குமதிதான். சீனாவில் இருந்து ஆண்டுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் நேரடியாகவும், 15 ஆயிரம் மெட்ரிக் டன் முறைகேடாகவும் இறக்குமதி செய்யப்படுகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சீனப் பட்டுக்கூடுகளுக்கு இறக்குமதி வரி 40 சதவீதமாக இருந்தது. தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. அதனால், அதிகளவு பட்டுக்கூடுகள் இறக்குமதியாகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசு பட்டுக்கூடுகள் அங்காடிகள் செயல்படவே இல்லை. தருமபுரி யில் உள்ள பட்டுக்கூடு அங்காடி யில் மட்டுமே ஓரளவு தமிழக பட்டுக் கூடுகளுக்கு விலை கிடைக்கிறது. அதனால், தமிழக விவசாயிகள், இங்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடு களை கர்நாடக மாநிலம் கொள் ளேகால், ராம் பட்டுக்கூடு அங்காடி களுக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கும் தமிழக பட்டுக்கூடுகள் என்றாலே ரூ.50 குறைத்து பாரபட்ச மாக விலை நிர்ணயிக்கின்றனர்.

சீனப் பட்டுக்கூடுகள் இறக்குமதி யைக் குறைத்தால் மட்டுமே, தமிழக பட்டுக்கூடுகளுக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் பட்டுக் கூடுகள் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுப் பதை விட்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை ஊக்குவிப் பது நியாயமல்ல. பட்டாசு வியா பாரிகளுக்காக சீனப் பட்டாசு இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசுகள், விவசாயிகள் நலனுக்காக சீனப் பட்டுக்கூடுகளுக்கு தடை விதிக்க மறுக்கின்றன. அதனால், இனி ஆண்டுக்கு ஆண்டு பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து ஒட்டுமொத்தமாக நலிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, “சர்வதேச சந்தையில் பட்டு நூலுக்கு நிர்ண யிக்கப்படும் விலையைப் பொறுத் துதான், பட்டுக்கூடுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வ தேச சந்தையில் பட்டு நூல் விலை அதிகரித்தால், பட்டுக்கூடுகள் விலை அதிகரிக்கும். பட்டுக்கூடுகள் விற்பனை வெளிப்படையானவை. சீனப்பட்டுக் கூடுகளை இறக்குமதி செய்வது மத்திய அரசின் கொள் கைரீதியான முடிவு. அதில் அதி காரிகள் தலையிட முடியாது என்றார்.

SCROLL FOR NEXT