தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் மாநில பொருளாதார கொள்கையை மாற்றி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதி வேட்பாளராக ஜே.எம்.எச்.ஹசன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரைஆதரித்து வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பங்கேற்று பேசியதாவது:
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70-க்குவிற்பனையானது. தற்போது 54 டாலராக குறைந்துவிட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இதேபோன்று டீசல்மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துவிட்டது. அதன் காரணமாக பேருந்து கட்டணஉயர்வு, மளிகை, காய்கறிகள் விலை உயர்வுஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தங்கள் வரியை குறைக்கவில்லை.