‘தி இந்து’ சார்பில் நவராத்திரியை முன் னிட்டு நடத்தப்பட்ட ‘கொலு கொண் டாட்டம்’ போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நவராத்திரியை முன்னிட்டு ‘தி இந்து’ சார்பில் 2-வது ஆண்டாக ‘கொலு கொண்டாட்டம்’ போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி 9 நாட் கள் நடைபெற்றன. சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இதில் ஏராளமான வாசகிகள் பங்கேற்றனர். தங்கள் வீடுகளில் வைத்திருந்த கொலுவை புகைப்படம் எடுத்து அனுப்பி இப்போட்டியில் கலந்து கொண்டனர். இப்புகைப்படங்களில் இருந்து சிறந்த கொலுவுக்கான பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
இப்போட்டியில் 250-க்கும் மேற் பட்டவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற 48 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தி.நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார அமைப்பின் அரங்கில் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வசந்த் அன் கோ உரிமையாளர் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில், மேக்ஸ் ரீடெயில் நிறுவனத்தை சேர்ந்த பிரதீப், மன்னா ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பு மேலாளர் வத்ஸ் வெங்கட், ‘தி இந்து’ உதவி மண்டல மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து மேக்ஸ் ரீடெயில், மன்னா ஹெல்த் மிக்ஸ், சக்ஸி பிட்னஸ், கிரி டிரேடிங், விஜயா ஆப்டிகல்ஸ், கிரியா சாரீஸ், ஹெல்த் பாஸ்கெட், அடையாறு ஆனந்த பவன், ஃபீவர் 91.9 ரேடியோ ஆகிய நிறுவனங்கள் நடத்தின.