திருச்சியில் மேற்கு தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூரில் நேற்று வாக்கு சேகரித்த கே.என்.நேருவுக்கு வரவேற்பளித்த பெண்கள். உடன், திமுக நிர்வாகிகள் வைரமணி, அன்பழகன், முத்துச்செல்வம் உள்ளிட்டோர். 
தமிழகம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதங்களுக்குள் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: தேர்தல் பிரச்சாரத்தில் கே.என்.நேரு உறுதி

செய்திப்பிரிவு

திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதங்களுக்குள் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு உறுதியளித்தார்.

திருச்சி மேற்கு சட்டப்பேர வைத் தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூரில் தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்துவைத்த அவர், பின்னர் பட்டி சாலை, செல்வநகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கள்தோறும் வாக்கு சேகரித் தார். அவருக்கு அப்பகுதி மக்கள் கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, கே.என்.நேரு பேசியது: திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என கடந்த 10 ஆண்டு களாக அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. அடுத்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதங்களுக்குள் எடமலைப் பட்டிபுதூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக் கப்படும். இதன் மூலம் இந் தப் பகுதி திருச்சி மாநகரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும். சாலை, குடிநீர், புதை சாக்கடை உள் ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். செல்லும் இடங்களில் எல்லாம் திமுக வுக்கு அதிக அளவில் ஆத ரவு உள்ளதால், திமுக தலை வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி அமைவது உறுதி என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது, திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT