மகாவீர் முக்தி தினமான நவம்பர் 11-ம் தேதி சென்னையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாந கராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும், அரசு உத்தரவின்படி மகாவீர் முக்தி தினமான நவம்பர் 11-ம் தேதி மூடப்படுகின்றன. அதேபோல், ஆடு, மாடு இதர இறைச்சி விற்கவும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே மகாவீர் முக்தி தினத்தன்று இறைச்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசின் உத்தரவுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.