புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவரது மகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத விஷயங்கள், ஊழல் தொடர்பாக 8 பக்க அறிக்கையைக் கையேடாக பாஜக தயாரித்துள்ளது. அதை மக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியைக் கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. அத்துடன் அவரைத் தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
முக்கியமாக ஊழல் விவகாரங்களைக் குறிப்பிட்டுப் பட்டியலிட்டுள்ளனர்.
அதில் உள்ள முக்கிய விவரங்கள்:
"புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது மகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். எஸ்.சி. மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலை திட்டம், முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாஹே துறைமுக பணியில் நிதி முறைகேடு, கேபிள் டிவி வரி வருமானத்தில் முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல் பட்டியல் நீள்வதாக" குறிப்பிட்டுள்ளனர்.