மதுரையில் இந்தத் தலைமுறை அல்ல, அடுத்த தலைமுறைக்குக்கும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்லூர் ராஜூ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, ”மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காக, சாலைகள், பாதாள சாக்கடை திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். மதுரையில் 5 மேம்பாலங்கள் கட்டியுள்ளேன். மதுரை மக்கள் தேவைப்படும் நேரத்தில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்.
24 மணி நேரமும் தண்ணீர் பெறலாம். இதன் காரணமாக எதிர்காலத்திலும் தண்ணீர் பிரச்சினை வராது. இந்தத் தலைமுறை மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் பிரச்சினையை நான் தீர்த்து வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சின்னம்மாள் போட்டியிடுகிறார். சின்னம்மாள், திமுகவில் மாநகர தெற்கு மாவட்டத்தில் துணைச் செயலாளராக உள்ளார். 40 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.