ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம் என்று சென்னை மக்களிடையே துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தார்.
சென்னை ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, ''திமுக ஆட்சிக் காலத்தில் சமூக நீதிப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? பல்வேறு தருணங்களில் ஸ்டாலினை முதல்வர் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவரால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.
ஜெயலலிதா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே திமுகதான். திமுகவினர் அடுத்தடுத்துத் தொடுத்த வழக்குகளால்தான் ஜெயலலிதா மன உளைச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
முடிந்த வழக்குகளை, தீர்ப்பு வந்த வழக்கை மீண்டும் மீண்டும் நீதிமன்றம் எடுத்துச் சென்று, அந்த வழக்கை ஜெயலலிதாவுக்கு எதிராகப் புதுப்பிப்பார்கள். யார் யாருக்கு என்னென்ன கெடுதல் வேலைகளைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும்தான் திமுகவினர் செய்வார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது'' என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.