தமிழகத்தில் 234 தொகுதிகளில் நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறை வடைந்த நிலையில், இரவு8.30 மணி நிலவரப் படி மனுக்களின் எண்ணிக்கை 6,100-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,500 பேருக்கும் மேல் மனுத்தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூர் தொகுதியில் சீமான், கோவில்பட்டியில் டிடிவி தினகரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
மூன்றாம் பாலினத்தவர்
மனுத்தாக்கல் தொடங்கிய 5-ம் நாளான நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 4,033 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதன்படி 3,355 ஆண்கள், 677 பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் இதில் அடங்குவர்.
தொடர்ந்து, வேட்புமனுத் தாக்கலின் இறுதிநாளான நேற்று காலை 11 மணி முதலே அனைத்து தொகுதிகளிலும் மனுக் கள் அதிகளவில் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி, 5,224 ஆண்கள், 940 பெண்கள், மதுரை தெற்கில் 2, மயிலாப்பூரில் 1 என 3 மூன்றாம் பாலின வேட்பாளர்கள் உட்பட 6,167 வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒருநாளில் மட்டும் 2,100-க்கும் மேற்பட்டவர்களின் மனுக்கள் தாக்கலாகின.
அதிகபட்சமாக நேற்று மாலை நிலவரப் படி, கரூர்- 88, மேட்டூர் - 73, காங்கேயம்- 58, கொளத்தூர்- 55, ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை- தலா 49, போடி நாயக்கனூர்- 49, துறை முகம்- 48, அருப்புக்கோட்டை- 41 சாத்தூர்- 40, பழனி- 42, ராதாபுரம்- 45 மனுக்கள் தாக்கலாகி இருந்தன. குறைந்த பட்சமாக விளவங்கோடு தொகுதி யில் 7 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி
அதேபோல், இடைத்தேர்தல் நடை பெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகு தியை பொறுத்தவரை, 15 ஆண்கள் 1 பெண் என 16 மனுக்கள் நேற்று மாலை வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற் கான நேரம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தநிலையில், இறுதியாக மனுக் களுடன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு,தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தொடங்குகிறது. பரிசீலனையின்போது தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்களும் உடன் இருப்பார்கள். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத, முன்மொழிபவர் இல்லாத, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் அனைத் தும் தள்ளுபடி செய்யப்பட்டு, வேட்பாளர் கள் கூடுதலாக சமர்ப்பித்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியில் உள்ள மனுக்கள் எத்தனை என்பது இன்று மாலை அல்லது இரவு தெரிவிக்கப்படும்.
அதன்பின், வரும் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட் டுள்ளது. அதன்பிறகும் வாபஸ் பெறப் படாத மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும்.
அப்போதே, வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும். சுயேச்சை வேட் பாளர்களுக்கு 5 சின்னங்கள் வழங்கப் பட்டு அதில் ஒன்று தேர்வு செய்ய அனுமதிக் கப்படும். ஒருவேளை ஒரே சின்னத்தை பலர் கேட்டால், குலுக்கல் அடிப்படையில் ஒதுக் கப்படும். அதன்பின், இறுதி வேட்பாளர் பட்டியல் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் விவரங்களை ஒட்டும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்குவார்கள். தொடர்ந்து, வரும் ஏப்ரல் 6-ல் வாக்குப்பதிவும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.