தீவுத்திடலில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்ததை அதிகாரிகள் தடுக்காததால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. சுமார் 60 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தீபாவளிக்கு முன்பு தொடர்ந்து 2 நாட்கள் பெய்த கனமழையால் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், தீவுத்திடலுக்கு வெளியே அனுமதியின்றி பலர் பட்டாசு விற்பனை செய்ததால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து சென்னை பட்டாசு வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தின் காப்பாளர் டி.புனிதன் கூறியதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு முதல் தீவுத் திடலில் பட்டாசு வியாபாரம் செய்து வருகிறோம். அப்போது 120 உறுப்பினர்கள் பட்டாசு கடைகளை வைத்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள், ஏலத் தொகையை அதிகரித்ததால் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு 60 கடைகள் மட்டுமே வைக்கப்பட்டன.
பல லட்சம் செலவு செய்து கடை வைத்தோம். 10 நாட்களுக்கு முன்பே வியா பாரம் தொடங்கினாலும் தீபாவளிக்கு முந்தைய கடைசி 3 நாட்கள்தான் வியா பாரம் சூடுபிடிக்கும். தீபாவளிக்கு முன்பு 2 நாட்கள் கனமழை பெய்ததால் வியாபாரம் பாதித்தது. தீபாவளி தினத்தன்று தீவுத் திடலுக்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் பட்டாசுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். அவர்களை அங் கிருந்து அப்புறப்படுத்தும்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் தெரிவித்தும் அவர் கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
லாரிகளில் தரமற்ற பட்டாசுகளை மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். ஏற்கெனவே மழையால் விற்பனை பாதிக் கப்பட்ட நிலையில், இதுபோன்று அனுமதி யின்றி பட்டாசு விற்பனை நடந்ததால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரும் நஷ்டத்துக்கு வியாபாரம் செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு புனிதன் கூறினார்.