திண்டுக்கல் தொகுதி தேர்தல் அலுவலரிடம் 2-வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன். 
தமிழகம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2-வது முறையாக வேட்புமனுத் தாக்கல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று 2-வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான நேற்று திடீரென திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் காசிசெல்வியிடம் 2-வது முறையாக தனது வேட்புமனுவை அமைச்சர் தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்எல்ஏ பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யாத நிலையில், 2-வது முறையாக முழு ஆவணங்களுடன் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று அவரது கட்சியினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT