மதுரையில் தேர்தல் பிரகடனத்தை வெளியிட்ட காந்தியவாதிகள். 
தமிழகம்

லஞ்சம் வாங்க மாட்டேன்; சொத்து சேர்க்க மாட்டேன்: தேர்தல் பிரகடனம் வெளியிட்ட காந்தியவாதிகள்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காந்தியத் தேர்தல் பிரகடனத்தை தமிழ்நாடு காந்தியவாதிகள் மதுரையில் வெளியிட்டனர்.

அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும்போது, வாக்காளர்கள் எதிர்பார்க்கும் 13 கேள்விகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரை காந்தி அருங்காட்சி யகம் டாக்டர் பாதமுத்து, காந்திய சிந்தனையாளர் வெங்காடம்பட்டி திருமாறன், நெல்லை காந்தியவாதி முத்துச்சாமி, காந்தியப் பிரமுகர் கல்லுப்பட்டி அன்புசிவன் ஆகி யோர் வெளியிட்ட தேர்தல் பிரகடன விவரம்:

பூரண மதுவிலக்கு கோரி தேவைப்பட்டால், மக்களோடு இறங்கி நீங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு எதிராகப் போராடுவீர்களா?

பதவியேற்றதும் கிராமப்புறக் கண்மாய்கள், குளங்களை ஆழப் படுத்துவீர்களா?

லஞ்சம் வாங்க மாட்டேன், சொத்து சேர்க்க மாட்டேன் என, தாய்,மனைவி, மக்கள் மீது உறுதி சொல்வீர்களா?

கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவர சட்டப்பேரவையில் பேசுவீர்களா?

படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வீடு, வீடாகச் சென்று வேலைவாய்ப்பு உத்தரவை வழங்க வழி வகை செய்வீர்களா?, 5 தடுப் பணைகளையாவது கட்டுவேன் என உத்தரவாதம் தருவீர்களா?

குக்கிராமங்களிலும் தொழில் கூடங்கள் ஏற்படுத்த உறுதி ஏற்பீர்களா? உள்ளிட்ட கேள்விகளை உங்கள் பகுதியில் வாக்கு கேட்டு வரும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்க வேண்டி யது அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT