காரைக்குடி சந்தைப்பேட்டை மயானத்தில் ஆதரவற்றோரின் சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்திய காரைக்குடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராசகுமார். 
தமிழகம்

மயானத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த ம.நீ.ம. வேட்பாளர்

செய்திப்பிரிவு

தனது அமைப்பின் சார்பில் மயானத்தில் அடக்கம் செய்யப்பட் டோருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராசகுமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமூக ஆர்வலர் ராசகுமார் போட்டியிடுகிறார். இதுவரை ஆதரவற்ற நிலையில் மரணமடைந்த 125 பேரின் உடல் களை தமிழக மக்கள் மன் றம் என்ற அமைப்பின் மூலம் அடக்கம் செய்துள்ளார் ராசகுமார். இந்நிலையில் நேற்று அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக காரைக்குடி சந்தைப் பேட்டை மயானத்தில் ஆதர வற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து தேவ கோட்டைக்குச் சென்ற ராசகுமார், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

SCROLL FOR NEXT