கருங்காலி கோல், சிறிய சூலத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன். படம்: எம். சாம்ராஜ் 
தமிழகம்

கருங்காலி கோல், சிறிய சூலத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன்

செ. ஞானபிரகாஷ்

கருங்காலி கோல், சிறிய சூலத்துடன் வந்து வேட்பு மனுவை புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வைத்துள்ளவர்கள். பலரும் ஜோதிடரின் வாக்குப்படி பல நடைமுறைகளை கடைபிடிப்பார்கள். குறிப்பாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் வெளியே செல்லும் வழியின் வழியாகத்தான் காரில் உள்ளேயே வருவார்.

எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அப்பா பைத்தியசாமியை வழிபடுவதுடன் சகுனம், நல்ல நாள், நேரம் பார்த்துதான் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவார். அதேபோல், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், சகுனம், ராசி, கோயிலில் வழிபட்டு தரப்படும் கயிறை கட்டிக்கொள்ளுதல் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்.

இதேபோல், புதுச்சேரி பாஜக மாநிலத்தலைவரும் தற்போது சிறிய அளவிலான கோல், சிறிய சூலத்துடன் வலம் வர தொடங்கியுள்ளார். இன்று (மார்ச் 19) வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர், மனுவுடன் அதிர்ஷ்டம் என நம்பும் கோல் மற்றும் சிறிய சூலத்தையும் வைத்திருந்தார்.

இதுபற்றி, அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, "சாமிநாதன் கையில் வைத்திருப்பது 'கருங்காலி கோல்'. இதனை வைத்திலிருந்தால் திருஷ்டி, சூனியம் தோஷங்கள் நீங்கும். அதை தினமும் பூஜை செய்து பயன்படுத்துகிறார். அத்துடன் புதுச்சேரியில் அதிகளவு சித்தர்கள் சமாதி அடைந்துள்ளனர். முக்கிய ஜீவ சமாதியில் வைத்து பூஜை செய்த வேல் ஒன்றையும் கையில் வைத்துள்ளார். அனைத்திலும் வெல்லவே முக்கியமான நேரங்களில் கையோடு எடுத்து வருகிறார்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT