சென்னை வியாசர்பாடியில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்ததால் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். அவர் அழைத்துச் சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து பலியானது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. லட்சுமியின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மின்சாரம் தாக்கி பலியாகினர். அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தற்போது வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் இதுவரை மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.