செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன். 
தமிழகம்

பெண்களுக்கான அனைத்து திட்டங்களும் வீடு தேடி வரும்: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் உறுதி

செய்திப்பிரிவு

பெண்களுக்கான அனைத்து திட்டங்களும் வீடு தேடி வரும் என செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் கஜேந்திரன் நேற்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காயரம்பேடு, கல்வாய், கருநீலம், கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், அஞ்சூர், குண்ணவாக்கம், பட்ரவாக்கம் சென்னேரி, வல்லம், மேலமையூர், ஆலப்பாக்கம், ஒழலூர், வீராபுரம் கிராம ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் வீடுதேடி வரும். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்காக 6 சமையல் காஸ் சிலிண்டர், மாதந்தோறும் ரூ.1,500 ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வழங்கப்படும்.

அதேபோல் கிராமப்புறங்களில் அரசு இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ரேஷன் பொருட்கள் பொது மக்களின் வீடுகளுக்கே வழங்கப்படும். அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கு அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும், அடிப்படை வசதிகள், பேருந்து வசதி அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்" என அவர் உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT