அட்டப்பாடி வனப்பகுதியில் 3 குழுக் களாக மாவோயிஸ்ட்கள் பதுங்கி யிருப்பதாகவும், அவர்களிடம் இயந்திரத் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து மாவோ யிஸ்ட்களை தேடும் பணியை தமிழக, கேரள போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர் .
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனப் பகுதியை ஒட்டி யுள்ள கேரள வனப் பகுதியான அட்டப்பாடி காட்டுக்குள் இயந்திரத் துப்பாக்கிகளோடு 20 பேர் கொண்ட மாவோயிஸ்ட்கள் 3 குழுக்களாகப் பிரிந்து பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 17-ம் தேதி அட்டப் பாடி வனத்தில் உள்ள சைலன்ட் வேலி எனப்படும் அமைதிப் பள்ளத் தாக்குப் பகுதியில் கடுகுமண்ணு என்ற இடத்தில் போலீஸார் மாவோயிஸ்ட்கள் இடையே துப் பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர், இதே பகுதியில் இம்மாதம் 8-ம் தேதி வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாகவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவ தாகவும் கேரள போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், அகளி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் தொடர்பு உள்ள தாகக் கூறப்பட்டது. அதனை யடுத்து 2 நாட்களுக்கு முன்பு அகளி போலீஸாரிடம் ஐயப்பன் சரணடைந்துள்ளார். அவரிடம், கேரள போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த விசாரணையில், தான் 4-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தாகவும், மலைவாசி கிராமப் பகுதி களில் மாவோயிஸ்ட்கள் குழு நடத்திய கூட்டங்களில் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்ததாகவும், மற்றபடி மாவோயிஸ்ட்கள் குறித்த சித்தாந்தங்கள் எதுவும் தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
கடுகுமண்ணு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையை அடுத்து, போலீஸாரின் தேடப்படும் பட்டியலில் தான் வந்ததையடுத்து, மாவோயிஸ்ட்கள் தொடர்பைத் துண்டித்து தலைமறைவாக காட் டுக்குள் சுற்றித் திரிந்ததாகவும், ஊர்க்காரர்களிடம் தன் நிலைமை யைச் சொல்லி வருந்தியதாகவும், அவர்கள் தைரியமூட்டியதைத் தொடர்ந்து போலீஸாரிடம் சரண டைந்ததாகவும் ஐயப்பன் தெரிவித் துள்ளாராம்.
மாவோயிஸ்ட்கள் பற்றி போலீ ஸாரிடம் அவர் கூறும்போது, ‘20 பேர் கொண்ட கும்பல் 3 குழுக் களாகப் பிரிந்து மாவோயிஸ்ட் தலைவர் விஜய் கவுடா மற்றும் வயநாட்டைச் சேர்ந்த சோமன் ஆகி யோர் தலைமையில் அட்டப்பாடி வனப் பகுதியை மையமாக வைத்துச் செயல்படுவதாகவும், அவர்களிடம் நவீன இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளன’ எனவும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து, வனத்துறையி னரை இரு மாநில எல்லையோர போலீஸார் உஷார்படுத்திள்ளனர். கேரளாவின் அட்டப்பாடி வனப் பகுதியை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேட்டுப்பாளையம் வனப் பகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையுடன் இணைந்து மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
தவிர தமிழக கேரள எல்லை யில் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள பில்லூர் அணை மற்றும் இரு மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி பாது காப்பை பலப்படுத்தியுள்ளனர்.
வனப்பகுதி மலை கிராமங் களுக்குச் சென்று புதிய நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடி யாகத் தகவல் தெரிவிக்கவும், அவர்களுடன் எவ்வித தொடர்போ, உதவி செய்யவோ கூடாது எனவும், அங்குள்ள மலைவாழ் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.