தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பழநியில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தூர் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், பிராமண சமூகத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின்தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு இல்லை என்றும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பாரதிய ஜனதா கட்சி இணைந்திருக்கும் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிராமணர்கள் சங்கம் முழு ஆதரவை அளிப்பதாகவும் தெரி விக்கப்பட்டது.
மேலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சிஅமைத்தால் பிராமணர் சமூகத்துக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் பிராமண சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.