அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி, திமுக முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த இல.கதிரேசன் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியதாவது:-
கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமையாகும். இதுவே உலகளாவிய நடைமுறையும் ஆகும். தமிழகத்தில் மட்டும் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்கான தடை நீடிக்கிறது. இது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். கள் விடுதலை கோரி கள் இயக்கம் இதுவரை நடத்திய பலதரப்பட்ட நியாயமான போராட்டங்கள் பயனற்றுப் போய்விட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக, திமுக கட்சிகள்வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கள் விடுதலை பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை.
இது, பனை, தென்னை விவசாயிகள், தொழி லாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், நுகர்வோர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் களுக்கு எதிராக கள் இயக்க வேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும், திமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியிலும் திருப்பூரைச் சேர்ந்தவரும், கள் இயக்கத்தில் 15 ஆண்டு களாகப் பணியாற்றி வருபவருமான இல.கதிரேசன் போட்டி யிடுகிறார்.
மேற்கண்ட இரண்டு தொகுதி களிலும் கதிரேசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்று செ.நல்லசாமி கூறினார்.