தமிழகம்

திமுகவில் 7, காங்கிரஸில் 4 பேர் புதுவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அதிகளவாக இத்தேர்தலில் 7 புதுமுகங்களுக்கு திமுக வாய்ப்பு அளித்துள்ளது. அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸில் 4 புதுமுகங்கள் இடம் பிடித்துள்ளனர்.

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக திமுகவில் 7 புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உருளையன்பேட்டையில் கோபால், நெல்லித்தோப்பு கார்த்திகேயன், திருபுவனை முகிலன், காலாப்பட்டு வக்கீல் முத்துவேல், நிரவி நாகதியாகராஜன், பாகூர் செந்தில்குமார், முதலியார்பேட்டை வக்கீல் சம்பத் என திமுக சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களில் 7 புதுமுகங்கள் இடம் பெற்றுள் ளனர்.

காங்கிரஸில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கதிர்காமம் செல்வநாதன்,இந்திராநகர் கண்ணன், முத்தியால் பேட்டை செந்தில்குமரன், மாகே ரமேஷ் பிரேம்பாத் ஆகிய 4 பேர் புதுமுகங்கள். ஏனாமில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இங்கு புதுமுகம் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரஸிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வேறு கட்சிகளுக்கு சென்று விட்டதால் புதிதாக பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. திமுகவில் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழலால் புதியவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளனர்" என்று குறிப்பிடுகின்றனர்.

பாஜகவில் 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

பாஜகவில் நெல்லித்தோப்பு விவிலியன் ரிச்சர்ட்ஸ், திருநள்ளாறு ராஜசேகரன், நிரவி மனோகரன் ஆகியோர் புதுமுகங்கள்.

அதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் ஆகியவற்றில் புதுமுக வேட்பாளர்கள் யாரும் இல்லை. என்.ஆர்.காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், நெடுங்காடு தொகுதியில் போட்டியிடும் மாரிமுத்து ஆகியோர் 70 வயதை கடந்தவர்கள். நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் விவிலியன் ரிச்சர்ட்ஸ், முத்தியால்பேட்டை காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்குமரன் ஆகியோர் 30க்கும் குறைந்த வயதுடைய வேட்பாளர்களாக உள்ளனர்.

புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக திமுகவில் 7 புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT